×

கள்ளக்குறிச்சியில் விவசாயம், நெல் மற்றும் பால் பண்ணை சார்பில் மூன்று நாட்கள் நடக்கிறது விவசாய கண்காட்சி.!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விவசாயம், நெல் மற்றும் பால் பண்ணை சார்பில் விவசாய கண்காட்சி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள்  வேளாண்மை மற்றும் விவசாய கண்காட்சியில் பாரம்பரிய நாட்டுரக காய்கறி விதைகள், பூ வகைகள் பல வகை விதைகள் விதைகள் மூலிகை விதைகள் மற்றும் நாற்றுகள் போன்ற விதைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய பாசனத்திற்கு தேவையான சொட்டுநீர் பல்புகள், பால் கறவை இயந்திரங்கள், பூச்சி மருந்து தெளிப்பான் கருவிகள், மரம் வெட்டும் இயந்திரங்கள்,மேலும் ஆர்கானிக் சொட்டுநீர் மருந்துகள், கடற்பாசி திரவ உரம், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்ற  இயற்கை வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் பெறக்கூடிய அளவிற்கு உள்ள பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டுமென கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் நெல் ஜெயராமன் பாதுகாப்பு மைய உயர்மட்ட குழு நிர்வாகி அசோகன் கூறி 174 ரக நெல் வகையினை எடுத்துரைத்தார். மேலும் பாரம்பரியமான நெல் வகைகளை பயிரிட்டு விவசாயிகள் உண்ண வேண்டும் என விவசாயிகளிடத்தில் கேட்டுக்கொண்டார். இதனை  மேலும் மூன்று நாட்கள் இந்த கண்காட்சி  நடைபெறும் என குறிப்பிடத்தக்கது….

The post கள்ளக்குறிச்சியில் விவசாயம், நெல் மற்றும் பால் பண்ணை சார்பில் மூன்று நாட்கள் நடக்கிறது விவசாய கண்காட்சி.! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalyana ,Mandapam ,Agriculture, paddy and dairy farming fair ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...